சுஜீவ சேனசிங்கவின் வீட்டிற்கு சென்று புலிகளின் ஆடைகளை தேடிய போலீசார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவின் கொள்ளுப்பிட்டியில் உள்ள வீட்டுக்கு , பாணந்துறை வலன ஊழல் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் சென்று அவசர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

விடுதலைப் புலிகள் அமைப்பினர் பயன்படுத்திய சீருடைகளின் பாகங்கள் மற்றும் வாகனங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறியும் நோக்கில் இது இடம்பெற்றுள்ளது.

நீதிமன்றத்தில் இருந்து பெறப்பட்ட தேடுதல் வாரண்டின் அடிப்படையில், இந்த பொலிஸ் அதிகாரிகள் குழு வீட்டிற்குச் சென்று சோதனை நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸ் அதிகாரிகள் குழு வீட்டிற்குச் சென்றபோது அவா வீட்டில் இல்லை எனவும், வேலைக்காரர் மட்டும் இருந்துள்ளார்.

குறித்த தேடுதல் நடவடிக்கைகள் இரண்டு மணித்தியாலங்கள் அளவு மேற்கொள்ளப்பட்டு ஊழியரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் சுஜீவ சேனசிங்க குருந்துவத்தை பொலிஸில் முறைப்பாடு செய்ததுடன், தான் வீட்டில் இல்லாத போது பொலிஸ் குழு என கூறிக்கொண்டு சிலர் தனது வீட்டை சோதனையிட்டதாக தெரிவித்துள்ளார்.

அவர்கள் உண்மையாகவே பொலிஸ் அதிகாரிகளா என்பதை கண்டறியுமாறும் முறைப்பாட்டின் மூலம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.