யாழ். போதனா வைத்தியசாலையில் சடலம்: அடையாளம் காண உதவுமாறு கோரிக்கை!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவரின் சடலத்தைப் பொறுப்பேற்குமாறு வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஒக்டோபர் மாதம் 27ஆம் திகதி சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட தர்மலிங்கம் வசந்தராஜன் (வயது 60) என்பவர் சிகிச்சை உயிரிழந்துள்ளார்.

இதுவரை அவரது சடலத்தை யாரும் அடையாளம் காட்டிப் பொறுப்பேற்காததால் சடலம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

உறவினர்கள் எதிர்வரும் 14 நாட்களுக்குள் சடலத்தை அடையாளம் காட்டி பொறுப்பேற்குமாறு யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் கோரியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.