தமிழர் தேசத்தில் படைக்கப்படப் போகும் ஒரு வரலாற்றுச் சாதனை.

இலங்கையின் அரசியல் வரலாற்றில் முதன் முறையாக ஒரு தமிழ் தேசிய கட்சி , தமிழர் தாயகமான வடக்கு கிழக்குக்கு வெளியே மலையகம் அடங்கலாக ஐந்து தேர்தல் மாவட்டங்களில் தனது வேட்பாளர்களை களம் இறக்கியுள்ளது .

ஆயிரத்து தொளாயிரத்து எழுபத்திரண்டாம் ஆண்டில் உதயமான தமிழர் விடுதலை கூட்டணி, அதன் செயலாளர் நாயகம் வீ .ஆனந்தசங்கரி அவர்களது வழி காட்டலில் , இளைஞர் யுவதிகள இவ்வாறு களம் இறங்குகிறார்கள்.

இது குறித்து அதன் சட்ட ஆலோசகரும், பேச்சாளருமான பவதாரிணி ராஜசிங்கம் கருத்து தெரிவிக்கும் போது , காலத்தின் தேவை கருதி , தமிழ் பேசும் மக்களின் தன்னிகரில்லா தலைவர்களான எஸ் ஜே வி செல்வநாயகம், ஜீ ஜி பொன்னம்பலம், சௌமியமூர்த்தி தொண்டமான் போன்ற தன்னிகரற்ற தலைவர்களின் சுய நலமற்ற இனம் சார்ந்த நன்மைக்கான கூட்டணியாக தமிழர் விடுதலைக் கூட்டணியை உருவாக்கினார்கள்.

இவர்களுடன் இஸ்லாமிய தமிழர் சார்பாக , முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஷ்ரப்பும் சேர்ந்து பயணித்து சிறுபான்மை மக்களின் உரிமைக்காக போராடினார் .

இதன் தலைவர்கள் 83 நடந்த இன கலவரத்தின் போது, தமது சொத்துக்களை இழந்ததும், ஒற்றை ஆட் சியை வலியுறுத்திய 6ம் திருத்த சட்ட த்தை நிராகரித்ததும், தமது நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை துறந்ததும் இன்றைய இளைஞர்கள் அறியாத தியாக வரலாறாகும்.

மீண்டும் அந்த வரலாறு புதுப்பிக்க தமிழர் விடுதலை கூட்டணி இன்று களம் இறங்கியுள்ளது .

யாழ், வன்னி, மட் டக்களப்பு, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய தமிழ் பேசும் மக்கள் செறிவாக வாழும் மாவட்டங்களில் , அந்த மக்களின் சேம நலனில் உண்மையான அக்கறை கொண்ட கறைபடியாத கரங்களுக்கு சொந்தக்காரரான கற்றறிந்த பல வேட்பாளர்களை , தமிழர் விடுதலை கூட்டணி மூலமாக ,எதிர்வரும் பொது தேர்தலில் களம் இறங்குகியுள்ளது .

எம் தமிழினம் , வரலாற்றின் ஒரு முக்கியமான காலக்கட்டத்தில், அரசியல் ஏதிலிகளாக இருக்கும் இந்த நேரத்தில் ஐக்கிய படவேண்டிய நாம், சிதறுண்டு இருக்கின்றோம் .

இந்த வேளையில் தமிழினத்தின் ஒற்றுமையின் அடையாளாமாக அரசியலில் வெவ்வேறாக பாதையில் பயணித்த தலைவர்கள் இணைந்து, ஒற்றுமையின் சின்னமாக அன்று உருவாக்கிய உதய சூரியனை, காலத்தின் தேவை கருதி , புதிய தலைமுறையுடன் இணைந்து , புதிதாக உதயம் ஆகியுள்ளது .

தமிழ் பேசும் மக்களுக்கான அரசியலாக எமது தலைவர்கள் உருவாக்கிய வடக்கு, கிழக்கு, மலையகம் ஆகிய பகுதிகளில் வாழும், தமிழ், முஸ்லீம், மக்களின் குரலாக நாம் நாடாளுமன்றில் ஒலிப்பதற்கு மக்கள் ஆணையை வேண்டி நிற்கின்றோம் .

வறுமை ,ஊழல் ,பெண்கள் மீதான வன்கொடுமை , போதை பாவனை போன்ற , எம் சமுதாயத்தை பீடித்து இருக்கும் இருளை அகற்ற உதய சூரியன் வீரியத்தோடு உதயமாக தமிழ் பேசும் வாக்காள பெருமக்களது ஆதரவை வேண்டுகிறோம் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.