முருகனைச் சந்தித்த சிவாஜிலிங்கம்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி பல ஆண்டுகளின் விடுதலை செய்யப்பட்ட முருகன், நளினி ஆகியோரை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் நேற்று வியாழக்கிழமை நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.

ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி சார்பில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே. சிவாஜிலிங்கம் இத்தாவில் பகுதியில் உள்ள முருகனின் இல்லத்துக்கு நேரில் சென்று சந்தித்துள்ளார்.

இதன்போது முருகனின் மனைவி நளினியும் உடன் இருந்துள்ளார்.

தமிழ்நாட்டின் வேலூர் சிறையில் இருந்த காலத்தில் பழ நெடுமாறனுடன் சென்று தான் சிறையில் வைத்து இவர்களைச் சந்தித்திருந்த நிலையில் அவர்கள் விடுதலை செய்யப்பட்ட போது மருத்துவ சிகிச்சைக்காகத் தமிழகத்தில் தங்கியிருக்க வேண்டி ஏற்பட்டிருந்தது என்றும், தற்போது விடுதலையின் பின்னர் அவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்ததாகவும் சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

முருகன், நளினி தம்பதியர் இலண்டனில் உள்ள தங்களது மகளிடம் செல்வதற்கு விண்ணப்பித்திருந்த நிலையில் அது நிராகரிக்கப்பட்டதை அடுத்து அவர்களின் மகள் மீண்டும் விண்ணப்பித்துள்ளார் என்றும், அதன் முடிவுக்காகக் காத்திருக்கின்றனர் என்றும் அவர்கள் தெரிவித்தனர் என்று சிவாஜிலிங்கம் மேலும் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.