டோனல்ட் டிரம்ப் தேர்ந்தெடுத்த வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரி.
அமெரிக்காவின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டோனல்ட் டிரம்ப்,சுசி வைல்ஸை (Susie Wiles) வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரியாக அறிவித்திருக்கிறார்.
டிரம்ப்பின் இரண்டு தேர்தல் பிரசார நிர்வாகிகளில் அவரும் ஒருவர்.
“வைல்ஸ் உறுதியானவர், திறமைசாலி,
புதிய சிந்தனை கொண்டவர், பலரின் மதிப்புக்குரியவர்.
அவர் அமெரிக்காவுக்குப் பெருமை சேர்ப்பார் என்பதில் சந்தேகமில்லை,” என்று டிரம்ப் குறிப்பிட்டார்.
வெள்ளை மாளிகைத் தலைமை நிர்வாகிப் பொறுப்பு, பெரும்பொறுப்பு.
பொதுவாக அவரைத் தாண்டித்தான் அதிபரை நெருங்க முடியும். வெள்ளை மாளிகையின் அதிகாரிகளுக்கு அவர் தான் பொறுப்பு. அது போக, அவர் அதிபரின் நேர அட்டவணை ஆகியவற்றை நிர்வகிப்பார்.
வெள்ளை மாளிகையின் தலைமை நிர்வாகியாக ஒரு பெண் பொறுப்பேற்கவிருப்பது இதுவே முதல் முறை.
டிரம்ப் அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 20ஆம்
தேதி அதிபராகப் பதவியேற்பார்.
2017ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை அவர் அதிபராகச் சேவையாற்றிய காலக்கட்டத்தின்போது அவருடன் பணிபுரிந்த பலரை உயரதிகாரி பொறுப்புகளுக்குத் தேர்ந்தெடுப்பார் என்று கூறப்படுகிறது.