வென்னப்புவ துப்பாக்கி சூடு நடத்திய கூலிப்படையினர் அடையாளம் காணப்பட்டனர்!

வென்னப்புவ கிம்புல்கான பிரதேசத்தில் நேற்று (7) பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட இருவர் வாடகைக்கு துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் ஏன அடையாளம் காணப்பட்டுள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அவர்களை கைது செய்ய விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்த போலீசார் , வென்னப்புவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிம்புல்கல பிரதேசத்தில் நேற்று (07) மாலை ஒரு ஆணும் பெண்ணும் காயமடைந்து மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்தனர்.

வாட்டர் ஃபில்டர் தயாரிக்கும் நிறுவன ஊழியர்கள் இருவர் துப்பாக்கிச்சூடு தாக்குதலுக்கு இலக்காகினர். வென்னப்புவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நீர் வடிகட்டும் இயந்திரத்தை பராமரிப்பதற்காக இவர்கள் இருவரும் வந்துள்ளனர். வீட்டை பழுதுபார்த்து விட்டு வெளியே செல்லும் போது முகத்தை மூடிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்கள் மாரவில பிரதேசத்தில் வசிக்கும் வீட்டின் உரிமையாளரான 65 வயதுடைய பெண்ணும், நீர் வடிகட்டி உற்பத்தி நிறுவனத்தில் பணிபுரியும் 45 வயதுடைய ஒருவருமே ஆவார்கள்.

Leave A Reply

Your email address will not be published.