டிரம்ப்பின் வெற்றிக்காக $200 மில்லியன் செலவிட்ட இலோன் மஸ்க்.
Tesla நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி இலோன் மஸ்க் , டோனல்ட் டிரம்ப்பை வெற்றிபெறச் செய்ய உருவாக்கிய செயற்குழுவுக்கு 200 மில்லியன் டாலர் (2.6 மில்லியன் வெள்ளி) செலவிட்டதாக AP செய்தி நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
தேர்தல் பணிகளுக்காக அந்தச் செயற்குழு அமைக்கப்பட்டது. அதற்குப் பெருமளவு தொகையை வழங்கியவர் மஸ்க் என்றும் நம்பப்படுகிறது.
முதன்முறை வாக்களிப்பவர்களையும் தேர்தல்களில் வாக்களிக்காதவர்களையும் டிரம்ப்புக்கு ஆதரவு வழங்க ஊக்குவிப்பதே செயற்குழுவின் முக்கியப் பணியாக இருந்தது.
டிரம்ப்பின் வெற்றிக்கு மஸ்க் பணம் மட்டும் செலவிடவில்லை. தேர்தல் பிரசார மேடைகளிலும் அவர் டிரம்ப்புடன் தோன்றி தமது ஆதரவைத் தெரிவித்தார்.
அதன் மூலம் அவரை முன்னுதாரணமாய் கருதும் பல இளையர்கள் டிரம்ப்புக்கு ஆதரவளித்ததாக AP செய்தி நிறுவனம் கூறியது.
தேர்தலில் அமோக வெற்றி பெற்ற டிரம்ப் புளோரிடாவில் வெற்றி உரை ஆற்றியபோது இலோன் மஸ்க்கைப் புகழ்ந்தார்.