யாழ். மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் கள ஆய்வு.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பெட்டி விநியோகித்தல் மற்றும் வாக்கெண்ணும் நிலையமான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு ஒழுங்கமைப்புக்கள் தொடர்பாக யாழ்ப்பாணம் மாவட்ட அரச அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபனின் தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை கள ஆய்வு செய்யப்பட்டது.
இந்தக் கள ஆய்வில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி உட்புற பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாகவும், வெளிப்புற சூழலில் வாகனப் போக்குவரத்தை மட்டுப்படுத்தல் தொடர்பாகவும், யாழ். வேம்படி உயர்தரப் பாடசாலையில் தேர்தல் பணியாளர்கள் மற்றும் முகவர்களின் வாகனப் பாதுகாப்பு தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
இந்தக் கள ஆய்வில் உதவித் தேர்தல்கள் ஆணையாளர் இ.கி.அமல்ராஜ், வடக்கு மாகாணப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஏ. ஜே. ஹாலிங்க ஜெயசிங்க, யாழ்ப்பாணம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லு.சூரிய பண்டார, யாழ்ப்பாணம் உதவி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் உதவி தெரிவத்தாட்சி அலுவலர்கள் கலந்துகொண்டார்கள்.