சிரியாவில் உள்ள ஈரான் ஆதரவு ராணுவக் கிடங்கைத் தாக்கிய அமெரிக்க ராணுவம்.
சிரியாவில் உள்ள ஈரான் ஆதரவுடன் செயல்படும் ராணுவ அமைப்பின் ஆயுதக் கிடங்கு மீது தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க ராணுவம் செவ்வாய்க்கிழமையன்று (நவம்பர் 12) தெரிவித்தது.
“இது, ஷடாடி சுற்றுக்காவல் தளத்தில் உள்ள அமெரிக்கப் படைகள் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலுக்கான பதிலடியாகும். அந்தத் தாக்குதலில் அமெரிக்காவுக்குச் சொந்தமான நிலையங்களுக்குச் சேதம் ஏதும் ஏற்படவில்லை. அமெரிக்கப் படையினர், அதன் பங்காளிகளின் படையினர் யாரும் காயமடையவில்லை,” என அறிக்கை ஒன்றில் அமெரிக்க ராணுவம் தெரிவித்தது.