இடது கை ஆட்காட்டி விரல் மீது இன்று அடையாளம் இடப்படும்! – தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு.

“இன்று நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின்போது வாக்காளரின் இடது கை ஆட்காட்டி விரல் மீது உரிய அடையாளம் இடப்படும். வாக்காளருக்கு இடது கை ஆட்காட்டி விரல் இல்லாதிருப்பின் அவரது வலது கையில் உள்ள வேறு ஏதேனுமொரு விரலில் உரிய அடையாளம் இடப்படும்.”

இவ்வாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பின்போது வாக்காளரின் இடது கை சுண்டு விரலில் உரிய அடையாளம் இடப்பட்டது. அத்துடன் கடந்த மாதம் 26ஆம் திகதி நடைபெற்ற காலி மாவட்டம், எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலின்போது வாக்காளரின் இடது கை பெருவிரலில் உரிய அடையாளம் இடப்பட்டது.

இவ்வாறான பின்னணியில் 1981ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க நாடாளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 38(3) (ஆ) பிரிவின் பிரகாரம், வாக்களிப்பின்போது வாக்களிப்பதை அடையாளப்படும்போது எழும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் இன்று நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் வாக்களிப்பின்போது வாக்காளரின் இடது கை ஆட்காட்டி விரல் மீது உரிய அடையாளம் இடப்படும்.

வாக்காளருக்கு இடது கை ஆட்காட்டி விரல் இல்லாதிருப்பின் அவரது வலது கையில் உள்ள வேறு ஏதேனுமொரு விரலில் உரிய அடையாளம் இடப்படும் என்றும் தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.