பிரதமர் நரேந்திர மோடி பயணித்த சிறிய ரக விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு!

ஜார்க்கண்ட் மாநிலம் தியோகர் சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி பயணித்த சிறிய ரக விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடி பயணித்த சிறிய ரக விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, அந்த விமானம் மீண்டும் பறக்க முடியாமல் போனது.

ஒருபக்கம், விமானத்தில் ஏற்பட்டிருக்கும் தொழில்நுட்பக் கோளாறை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. புது தில்லியில் இருந்து வேறொரு சிறிய ரக விமானம் தியோகர் அனுப்பும் பணியும் நடந்து வருகிறது. இன்று மாலை 4.40 மணி நிலவரப்படி, பிரதமர் மோடி தியோகர் விமான நிலையத்தில்தான் தில்லி செல்ல மறுவிமானத்துக்காகக் காத்திருக்கிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று இரண்டு பொதுக்கூட்டங்களில் பங்கேற்றார். இன்று பழங்குடியினத் தலைவர் பிர்சா முண்டாவின் நினைவுத்தினம் என்பதால், அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார் பிரதமர் மோடி.

முன்னதாக, தியோகரிலிருந்து 80 கி.மி. தொலைவில் ஜார்க்கண்ட் மாநிலம் கோடாவில் ராகுல் காந்தியின் ஹெலிகாப்டருக்கு விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையத்திடமிருந்து அனுமதி கிடைக்கவில்லை என்று கூறி ஒரு மணி நேரம் ராகல், ஹெலிகாப்டரில் காத்திருக்க வைக்கப்பட்டார். இதனால், ராகுல் காந்தியின் தேர்தல் பிரசாரத்திட்டம் பெரிதும் பாதிக்கும் என காங்கிரஸ் குற்றம்சாட்டியிருந்தது.

பிரதமர் மோடியும் இதேப் பகுதியில் பயணிப்பதால், ராகுல் காந்தியின் ஹெலிகாப்டருக்கு அனுமதி கிடைக்கவில்லை என்றும் காங்கிரஸ் கூறியிருக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.