கேன் வில்லியம்சன் காயத்தில் இருந்து மீண்டு டெஸ்ட் அணிக்கு திரும்ப அழைக்கப்பட்டுள்ளார்.

நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சன் காயத்தில் இருந்து மீண்டு டெஸ்ட் அணிக்கு திரும்ப அழைக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான நியூசிலாந்து அணியின் கடைசி டெஸ்ட் தொடரில் வில்லியம்சன் பங்கேற்கவில்லை.

மேலும், இலங்கைக்கு எதிரான இரண்டு மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் தொடரில் சேர்க்காமல் ஓய்வில் இருந்த கேப்டன் டாம் லாதமுடன், இங்கிலாந்துக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் டாம் ப்ளண்டல், டாரல் மிட்செல், வில் ஓ ரூக், ரச்சின் ரவீந்திர மற்றும் டிம் சவுத்தி ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இம்மாதம் 28ஆம் திகதி கிறைஸ்ட்சர்ச்சில் ஆரம்பமாகவுள்ளது, மேலும் இந்தத் தொடர் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் கீழ் நடைபெறவுள்ளது.

வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுத்தி, நியூசிலாந்துக்கு உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால், இந்தத் தொடருக்குப் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவேன் என்று சமீபத்தில் அறிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.