கம்பஹாவில் தோல்வியடைந்த திலித் , தேசிய பட்டியல் வழி பாராளுமன்றத்துக்கு?
“சர்வஜன அதிகாரம்” கட்சிக்கு வழங்கப்பட்டுள்ள தேசியப்பட்டியல் வழியாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு மௌபிம ஜனதா கட்சியின் தலைவரும் கோடீஸ்வர வர்த்தகருமான திலித் ஜயவீர நியமிக்கப்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திலித் ஜயவீர கம்பஹா மாவட்டத்தில் சர்வஜன அதிகாரம் கட்சியின் கீழ் போட்டியிட்டார், ஆனால் அந்த மாவட்டத்தில் 25,939 வாக்குகளை மட்டுமே பெற முடிந்ததால் அவருக்கு ஆசனம் கிடைக்கவில்லை.
எவ்வாறாயினும், அவரது கட்சி நாடளாவிய ரீதியில் 178,006 வாக்குகளைப் பெற்றுள்ளதால் அவர்கள் ஒரு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியைப் பெற்றுள்ளனர்.