சிதைந்த ரணில் ஆதரவாளர்களது கனவு

ரணிலைப் பின்பற்றுபவர்களின் கனவுகள் கலைந்துள்ளன… தேசியப் பட்டியலில் பெயர் இல்லாமல் தேர்தலில் போட்டியிடாத எவருக்கும் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவி வழங்க முடியாது… என தேர்தல் ஆணைக்குழு வலியுறுத்தல்!

தேசியப்பட்டியலில் இல்லாதவர் அல்லது பாராளுமன்ற வேட்பாளராக இல்லாதவர் தேசியப்பட்டியல் வழியாக பாராளுமன்றத்திற்கு பிரவேசிக்க முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

தேசிய பட்டியல் வேட்புமனுவில் சமர்ப்பிக்கப்பட்ட பெயர் அல்லது தேர்தலில் போட்டியிட்டு தேசிய பட்டியல் உறுப்பினர் பதவிக்கு தோல்வியடைந்த வேட்பாளர் தவிர வேறு ஒருவரின் பெயரை வர்த்தமானியில் வெளியிட முடியாது என தேர்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க விளக்கமளித்துள்ளார்.

இம்முறை தேர்தலில் போட்டியிடாத புதிய ஜனநாயக கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை தேசிய பட்டியலிலிருந்து பாராளுமன்றத்திற்கு கொண்டு வருவதற்கு தயார் நிலையில் இருந்ததாகவும் தேர்தலுக்கு முன்னர் அதற்கான வழிகள் இருப்பதாகவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன மற்றும் சட்டத்தரணி பிரேமநாத் ஸ்ரீ டொலவத்த ஆகியோர் தெரிவித்திருந்தனர்.

அதற்கான வாய்ப்பு இல்லை என தேர்தல் ஆணையத்தின் இயக்குநர் ஜெனரல் விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு ஏற்ப வேட்பாளர்களை நியமனம் செய்து , எம்மிடம் கையளிக்கப்பட்டுள்ள தேசியப்பட்டியலில் இருந்து கட்சியின் செயலாளரோ அல்லது சுயேச்சைக்குழுவின் தலைவரோ உரிய பெயர்களை தெரிவு செய்து அனுப்ப முடியும்.

மேலும், இத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தாலும் கட்சியின் செயலாளருக்கு தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவி வழங்க முடியும்.

“தேசியப் பட்டியல் அல்லது தொகுதி வேட்பு மனுவில் இல்லாத ஒருவரை வர்த்தமானியில் வெளியிட முடியாது.” என தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.