7 மலையக எம்.பிக்கள் சபைக்குத் தெரிவு! முன்னாள் எம்.பிக்கள் அறுவர் தோல்வி!!

நாடாளுமன்றத் தேர்தலில் ஏழு மலையக எம்.பிக்கள் தெரிவாகியுள்ளனர். அத்துடன், முன்னாள் மலையக எம்.பிக்கள் அறுவர் தோல்வியடைந்துள்ளனர்.

நுவரெலியா, பதுளை, இரத்தினபுரி, மாத்தறை ஆகிய மாவட்டங்களில் இருந்தே மலையகத் தமிழ்ப் பிரதிநிதித்துவம் வென்றெடுக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட கிஷ்ணன் கலைச்செல்வி 33 ஆயிரத்து 346 வாக்குளைப் பெற்றும், ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் ஜீவன் தொண்டமான் 46 ஆயிரத்து 438 வாக்குகளைப் பெற்றும், ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் பழனி திகாம்பரம் 48 ஆயிரத்து 18 வாக்குளைப் பெற்றும், வே.இராதாகிருஷ்ணன் 42 ஆயிரத்து 273 வாக்குகளைப் பெற்றும் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ளனர்.

பதுளை மாவட்டத்தில் இருந்து கிட்ணன் செல்வராஜ், அம்பிகா சாமுவேல் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

இரத்தினபுரி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட சுந்தரலிங்கம் பிரதீப்பும், மாத்தறை மாவட்டத்தில் போட்டியிட்ட சரோஜா போல்ராஜும் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் சார்பில் தேசியப் பட்டியலில் பெயரிடப்பட்டுள்ள இராமலிங்கம் சந்திரசேகரனும் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகினால் மொத்தமாக 8 மலையக எம்.பிக்கள் இம்முறை நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவர்.

மனோ கணேசன் தேசியப் பட்டிலில் வந்தால் அந்த எண்ணிக்கை 9 ஆக உயரும்.

வேலுகுமார், அரவிந்தகுமார், உதயகுமார், மருதபாண்டி ராமேஸ்வன் மற்றும் மனோ கணேசன் ஆகியோர் தேர்தலில் தோல்வியடைந்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.