பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கிடைக்கும் வரப்பிரசாதங்கள் என்ன? இதோ ….
பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களுக்கு சட்ட ரீதியாக 7 விசேட சலுகைகள் கிடைக்கப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கி பயிற்சி, போலீஸ் பாதுகாப்பு நிமித்தம் அதிக வெளிச்சம் கொண்ட 4 வீட்டு விளக்குகள் போன்றவை அவற்றில் சில.
இது தவிர, சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளும் கிடைக்கின்றன. பாராளுமன்ற உறுப்பினரது சம்பளம் ரூ. 54285/- . ஒரு நாடாளுமன்ற நாள் கூட்டத்திற்கு ரூ. 2500/- உதவித் தொகையும் உண்டு.
எம்.பி.க்களுக்கு அடுத்த சலுகையாக ரூ. 2000/- மாத வாடகைக்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒரு வீடு.
இது தவிர, ஒரு பாராளுமன்ற உறுப்பினர்., அலுவலகம் ஒன்றை நடத்துவதற்கு, மாதாந்தம், 1 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது.
இது தவிர, ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு பத்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள காப்பீட்டுத் தொகையும் வழங்கப்படும்.
பாராளுமன்ற உறுப்பினருக்கு ., உயிரிழப்பு ஏற்பட்டால், ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்படும்.
ஒரு பாராளுமன்ற உறுப்பினரது பொதுவான நோய்களுக்கு நாடாளுமன்ற மருத்துவ மையத்தில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இது தவிர, பாராளுமன்ற உறுப்பினருக்கு வாகன உரிமம் மற்றும் டிப்ளமேடிக் பாஸ்போர்ட் வரிச் சலுகையுடன் பெறுகின்றனர்.
இது தவிர, நாடாளுமன்ற சபையில் உறுப்பினர் ஒருவர் கூறும் விஷயத்தின் மீது வழக்கு தொடர முடியாது.
அவரை விசாரிக்கவோ, கைது செய்யவோ வாய்ப்பில்லை என்று சிறப்புரிமைச் சட்டம் கூறுகிறது.
பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு இப்படியான 7 முக்கிய சிறப்புரிமைகள் மற்றும் சலுகைகள் பல உள்ளன என உரிய விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.