சிலிண்டரில்’ இரு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்கள் யார்? சாகல,காஞ்சன ரொனால்ட் ,ஃபைசர் கடும் போட்டி
பொதுத் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணி (சிலிண்டர்) பெற்றுள்ள தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளின் எண்ணிக்கை 2 ஆகும்.
இரண்டு ஆசனங்களுக்காக முன்னாள் அமைச்சர்களான சாகல ரத்நாயக்க, பைசர் முஸ்தபா, காஞ்சன விஜேசேகர மற்றும் ஜனாதிபதியின் சட்டத்தரணிரொனால்ட் பெரேரா ஆகியோருக்கிடையில் கடும் மோதல் ஏற்பட்டுள்ளதாக‘சிலிண்டர்’ கட்சியின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேசிய பட்டியலிலிருந்து நியமிக்கப்படவுள்ள பிரதிநிதிகள் தொடர்பானகலந்துரையாடல் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கொழும்புஅரசியல் காரியாலயத்தில் நேற்று இடம்பெற்றது.
இதேவேளை, நேற்று இரவு கடந்த அரசாங்கத்தின் இளைய பாராளுமன்றஉறுப்பினர்கள் பலர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைசந்தித்துள்ளனர். புதிதாக அரசியலை ஆரம்பிக்குமாறு ரணில் விக்ரமசிங்க, அவர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஐக்கிய தேசியக் கட்சியை முழுமையாக மறுசீரமைத்து இளைஞர்களுக்குமுன்னுரிமை வழங்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்உறுதியளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.