ஹிஸ்புல்லா ஊடகத் தலைவரையும் இஸ்ரேல் கொன்றது (Video)
இன்று, பெய்ரூட்டின் பரபரப்பான பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தின் மீது இஸ்ரேலிய தாக்குதலில் ஹெஸ்புல்லா ஊடக தலைவர் முகமது அஃபிஃப் கொல்லப்பட்டார்.
ஹிஸ்புல்லா அமைப்பு மற்றும் இஸ்ரேலிய படைகள் இது பற்றிய கூடுதல் விவரங்களைக் குறிப்பிடவில்லை.
தெற்கு பெய்ரூட்டில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதல்களால் இடம்பெயர்ந்த பலர் தங்கியுள்ள ராஸ் அல்-நபா இன்று தாக்கப்பட்டது.
லெபனான் சுகாதார அமைச்சின் தகவலின்படி, தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.
லெபனானில் பாத் (Ba’ath) கட்சியைச் சேர்ந்தவர்கள் தங்கியிருந்த கட்டிடம் மீது இஸ்ரேலிய விமானத் தாக்குதல்கள் நடந்ததாகவும், கொல்லப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் அஃபிஃப் அங்கேயே தங்கியிருந்ததாகவும் கூறப்படுகிறது.
தாக்குதல் நடந்த இடத்திற்கு ஆம்புலன்ஸ்கள் விரைந்ததாகவும், தேவையில்லாமல் மக்கள் கூடுவதை தடுக்க பாதுகாப்பு படையினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும் கூறப்படுகிறது.