அமைச்சர்களாக பதவியேற்க வருகிறார்கள்.. 23 அமைச்சரவைகள் : 27பிரதி அமைச்சர்கள்
தேசிய மக்கள் சக்தியின் புதிய அரசாங்க அமைச்சரவை இன்று பதவியேற்கவுள்ளது.
ஜனாதிபதி அநுர திஸாநாயக்க முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறுகிறது.
தற்போதும் பதவிப்பிரமாணம் செய்யவுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு வருகின்றனர்.
23 அமைச்சரவை அமைச்சர்களும் 27பிரதி அமைச்சர்களும் நியமிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பிரதமர் பதவியில் மாற்றம் செய்யப்படாது ஹரிணி அமரசூரிய தொடர்ந்தும் அந்த பதவியை வகிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.