தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சரவை இதோ …

தேசிய மக்கள் சக்தியின் புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சர்கள் இன்று (18) முற்பகல் 10 மணிக்கு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

2024 பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி 22 தேர்தல் மாவட்டங்களில் 21 மாவட்டங்களில் அமோக வெற்றியைப் பதிவு செய்ததோடு, தேசிய பட்டியல் ஆசனங்கள் உட்பட பாராளுமன்றத்தில் 159 ஆசனங்களைக் கைப்பற்றியது.

இதன்படி, புதிய அரசாங்கத்திற்கான அமைச்சரவை இன்று (18) கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் பதவியேற்றது.

ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்ட புதிய அமைச்சரவை அமைச்சர்கள் பின்வருமாறு. ஒளிபரப்பு

1.கலாநிதி ஹரினி அமர சூரிய- பிரதமர், கல்வி, உயர்கல்வி, தொழிற்கல்வி
2.விஜித ஹேரத்- வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு, சுற்றுலா
3.பேராசிரியர் சந்தன அபேரத்ன- பொதுநிர்வாக, மாகாணசபைகள், உள்ளூராட்சிசபை
4.சட்டத்தரணி ஹர்சன நாணயக்கார- நீதி, தேசிய ஒருமைப்பாடு
5.சரோஜா சாவித்திரி போல்ராஜ்- மகளிர், சிறுவர் அலுவல்கள் அமைச்சர்
6.கே.டி.லால்காந்த- கமத்தொழில், கால்நடைகள், காணி, நீர்ப்பாசனம்
7.இராமலிங்கம் சந்திரசேகர்- கடற்தொழில், நீரியல், கடல் வளங்கள்
8.பேராசிரியர் உபாலி பன்னிலகே- கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை
9.சுனில் ஹந்துன்நெத்தி- கைத்தொழில், தொழில் முயற்சியாண்மை, அபிவிருத்தி
10.ஆனந்த விஜேபால- பொதுமக்கள் பாதுகாப்பு, பாராளுமன்ற விவகாரங்கள்
11.பிமல் ரத்நாயக்க – போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள், சிவில் விமானசேவை
12.பேராசிரியர் ஹனிதும சுனில் செனவி- புத்தசாசன, சமய, கலாசார
13.வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ- சுகாதாரம், வெகுசன ஊடகம்
14.சமந்த வித்தியாரத்ன- பெருந்தோட்ட, சமூக உட்கட்டமைப்பு
15.சுனில்குமார கமகே- இளைஞர் விவகாரம், விளையாட்டு
16.வசந்த சமரசிங்க- வர்த்தக, வாணிப, உணவுப்பாதுகாப்பு, கூட்டுறவு அபிவிருத்தி
17.பேராசிரியர் கிருசாந்த அபேசேன- விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம்
18.அனில் ஜயந்த பெர்னாண்டோ- தொழில்
19.பொறியியலாளர் குமர ஜயக்கொடி- வலுசக்தி
20.வைத்தியர் தம்மிக்க படபெந்தி- சுற்றாடல்
21.அனுர கருணாதிலக- நகர அபிவிருத்தி, வீடமைப்பு, நிர்மாணிப்பு

Leave A Reply

Your email address will not be published.