தேர்வில் தோல்வியடைய கடவுள் காரணம் என நினைத்து கோவில் சிலையை உடைத்த மாணவன்!
தேர்வில் தோல்வியடைய கடவுள் காரணம் என நினைத்து பள்ளி மாணவன் கோவில் சிலையை உடைத்துள்ளான்.
கர்நாடக மாநிலம் கிழக்கு பெங்களுருவில் உள்ள திப்பசந்திராவில் கோவிலில் இருந்த கடவுள் புவனேஸ்வரி சிலை கீழே உடைந்து கிடந்துள்ளது.
இதை சில மணி நேரங்கள் கழித்தே கோவில் பூசாரி கவனித்துள்ளார். இது தொடர்பாக ஜீவன் பீம் நகர் காவல் நிலையத்தில் கோவில் நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
புகாரின் அடிப்படையியல் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், கோவிலில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். சிசிடிவி காட்சிகளில் சிறுவன் ஒருவன் சிலையை உடைப்பது தெரிய வந்துள்ளது.
சிறுவனின் வீட்டை கண்டுபிடித்த காவல்துறையினர் மப்டியில் சென்று சிறுவனை அழைத்து வந்தனர். விசாரணையில், பலமுறை 10 ஆம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்துள்ளதாகவும், தேர்வில் தோல்வியடைந்ததற்கு கடவுள்தான் காரணம் என நம்பி சிலையை உடைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளான். இதனையடுத்து சிறுவனை சிறார் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.