நாட்டு மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட அனைத்து செல்வங்களும் மீட்கப்படும்..- அமைச்சர் வசந்த
மக்களின் அனைத்து எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்ற தயாராக இருப்பதாக வர்த்தக, கூட்டுறவு மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களைப் பிழியும் மாபியாக்களுக்கு இனி அப்படியான செயற்பாடுகளை செய்ய முடியாது என்றார்.
எதிர்காலத்தில் மக்கள் குறைந்த விலையிலும் தட்டுப்பாடு இன்றி பொருட்களையும் வாங்கக்கூடிய சந்தை ஒன்று உருவாகும். நாட்டு மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட அனைத்து செல்வங்களையும் மீண்டும் கொண்டு வர அரசாங்கம் செயற்பட்டு வருவதாக அவா மேலும் தெரிவித்துள்ளார்.
புதிய அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.