புதிய அரசாங்கத்தின் பிரதி அமைச்சர்கள் நாளை மறுதினம் (21) பதவிப்பிரமாணம்?
தேசிய மக்கள் சக்தியின் புதிய அரசாங்கத்தின் பிரதி அமைச்சர்களது பதவிப்பிரமாணம் நாளை மறுதினம் (நவம்பர் 21) மேற்கொள்ளப்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புதிய பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டம் காலை நடைபெறும் எனவும், அதன் பின்னர் பாராளுமன்ற கூட்டத்தின் பின்னர் பிரதி அமைச்சர்கள் அன்றைய தினம் பிற்பகல் சத்தியப்பிரமாணம் செய்து கொள்வார்கள் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
21 உறுப்பினர்களைக் கொண்ட புதிய அமைச்சரவை நேற்று (நவம்பர் 18) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டது.
மேலும் சில பெரிய அமைச்சுக்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பிரதி அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளதால் பிரதி அமைச்சர்களின் எண்ணிக்கை 21க்கு சற்று அதிகமாகவே அதிகரிக்கவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.