நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத் தொடர் இப்படித்தான் ஆரம்பமாக உள்ளது!

எதிர்வரும் நவம்பர் மாதம் 21ஆம் திகதி ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையில்,   முதலாவது நாடாளுமன்றத்தின் சபை ஆரம்பமாகவுள்ளது.

அதன் பிரகாரம் 10வது பாராளுமன்ற கூட்டத் தொடர் விழாவை மிக எளிமையாக  நடாத்துவதற்கான அறிவுறுத்தல்கள் கிடைத்துள்ளதாகப் பாராளுமன்றச் செயலாளர்   நாயகம் திருமதி குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பாராளுமன்றம் சம்பிரதாயபூர்வமாக  ஆரம்பமாகும் போது முப்படையினரின் வணக்கத்துடன்   ஜெயமங்கல கீர்த்தனைகளைப் பாடுவது மரபு. ஆனால் இங்குஇந்த விழாவை மிக எளிமையாக நடத்துவதற்கான வழிமுறைகள் கிடைத்துள்ளன. எனவே, ஜனாதிபதி நேரடியாக அவருக்காக ஒதுக்கப்பட்டுள்ள அறைக்கு அழைத்துச்    செல்லப்பட்டுச்  சில நிமிடங்கள் அங்கேயே அமர்ந்திருந்து,   நாடாளுமன்றத்தின் ஆரம்ப மணி  அடித்த பின், ஆடை மாற்றும் அறையிலிருந்து, ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படுவார். பின்னர் ஜனாதிபதி,  நாற்காலியில் அமர்ந்து கொண்டே ,   கொள்கைப் பிரகடனத்தை வெளியிடவுள்ளார்.”   எனத் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.