ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து ரவி கருணாநாயக்க நீக்கம்.
புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப்பட்டியலில் ரவி கருணாநாயக்கவின் பெயரைத் தன்னிச்சையாக உள்ளடக்கப்பட்டக்கியதன் காரணமாக அவரின் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமையை இரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சிக்கு தெரியாமல் வேறு ஒரு கட்சியின் செயலாளர்கள் ஊடாக இந்த தன்னிச்சையான வேலையை ரவி கருணாநாயக்க செய்துள்ளதாக கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
கட்சியின் அரசியலமைப்பை மீறியமையால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அந்த பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.