தேசியப்பட்டியலால் SJB க்குள் பூகம்பம்

இம்முறை தேசியப்பட்டியல் வழியாக பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு ஆட்களை நியமிப்பதில் ஐக்கிய மக்கள் சக்தி கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளது.

தற்போது அந்த ஆசனங்களுக்கு ரஞ்சித் மத்தும பண்டார, இம்தியாஸ் பாக்கீர் மார்க்கர், டலஸ் அலபெரும, ஜி.எல்.பீரிஸ் மற்றும் சுஜீவ சேனசிங்க ஆகியோரை நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளது.

ஆனால் அந்த பதவிகளுக்கு எரான் விக்ரமரத்ன, மனோ கணேசன் உள்ளிட்டோரையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என மற்றுமொரு குழுவினர் கருதுகின்றனர்.

சேனசிங்கவின் நியமனத்துக்கும் குழு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

இத்தேர்தலில் ஐந்து தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளை அக்கட்சி வென்றுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக கலந்துரையாடல் இன்றும் இடம்பெறவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.