சிலிண்டர் தேசியப்பட்டியல் வழியாக பாராளுமன்றத்துக்கு நுழைய தயாராகும் ரணில்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொதுத் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணிக்கு கிடைத்த தேசியப்பட்டியல் மூலம் மீண்டும் பாராளுமன்றத்திற்கு பிரவேசிக்க தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, கட்சியின் இரண்டு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு நியமிக்கப்பட்ட இருவரில் ஒருவர் இராஜினாமா செய்ய உள்ளனர்.
பின்னர் அந்த வெற்றிடத்திற்கு வேறு ஒருவரை நியமிப்பதற்கு சட்டத் தடை இல்லை என்பதால் ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட உள்ளார்.