புதிய நாடாளுமன்றத்தின் சபாநாயகராக நாடாளுமன்ற உறுப்பினர் அசோக ரங்வல.

புதிய நாடாளுமன்றத்தின் சபாநாயகராக நாடாளுமன்ற உறுப்பினர் அசோக ரங்வல நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதமர் ஹரிணி அமரசூரிய, அசோக ரங்வலவின் பெயரைப் பரிந்துரைத்தார், அமைச்சர் விஜித ஹேரத் அதனை உறுதிப்படுத்தினார்.

அதன்படி, சபாநாயகராக அசோக ரங்வல ஏகமனதாக பெயரிடப்பட்டார்.

இதேவேளை, பிரதி சபாநாயகர் பதவிக்கு நாடளுமன்ற உறுப்பினர் மொஹமட் ரிஸ்வி சாலி நியமிக்கப்பட்டார்.

சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ அவரது பெயரை முன்மொழிந்தார், அதை மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் உறுதிப்படுத்தினார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஹேமலி வீரசேகர பிரதிக் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி இதனை முன்மொழிந்தார்.

இதேவேளை, ஆளும் கட்சியின் தலைவராக அமைச்சர் பிமல் ரத்நாயக்கவும், ஆளும் கட்சியின் பிரதம கொறடாவாக நலிந்த ஜயதிஸ்ஸவும் நியமிக்கப்பட்டனர்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சபாநாயகர் வரவேற்றார்.

இதேவேளை, முற்பகல் 11:30 மணிக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தை சபையில் முன்வைத்து விசேட உரை நிகழ்த்தவுள்ளார்.

அரசியலமைப்பில் 33 (அ) உறுப்புரையின் படி நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஒன்றின் ஆரம்பத்தில் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை சபையில் சமர்ப்பிப்பதற்கும் அரசியலமைப்பின் 33 (ஆ) உறுப்புரைக்கு இணங்க நாடாளுமன்றத்தில் வைபவ ரீதியான அமர்வுகளுக்கு தலைமை தாங்குவதற்கும் ஜனாதிபதிக்கு அதிகாரம் காணப்படுகிறது.

அந்த வகையில் அரசாங்கத்தின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பான விளக்கமான கொள்கை பிரகடனத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார்.

Leave A Reply

Your email address will not be published.