அர்ச்சுனா இராமநாதன் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழப்பாரா?
நேற்றைய தினம் பாராளுமன்றக் கூட்டத்திற்கு முன்னர் எதிர்க்கட்சித் தலைவர் ஆசனத்தில் அமர்ந்த யாழ்.சுயேச்சைக் குழு எம்.பி வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன், பாராளுமன்ற அதிகாரியோடு வாக்குவாதத்தின் பின்னரும் கூட ஆசனத்தை விட்டு வெளியேறவில்லை, சுதந்திரமாக விரும்பிய இடத்தில் உட்கார முடியும் என அனுமதி உள்ளமையால், தான் குற்றவாளி இல்லை என்பதே அவரது வாதமாக இருந்தது. .
இச்சம்பவம் தொடர்பான காணொளியை அதே நாடாளுமன்ற உறுப்பினரே படமாக்கி , தனக்கு பாதகமான நிலையிலும் நெகட்டிவ் மார்க்கெட்டிங் (negative marketing) உத்தி மூலம் கவனத்தை ஈர்க்க முயல்வதாக விமர்சிக்கப்படுகிறது.
இருப்பினும், அவரது இரட்டைப் பதிவு தொழில் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு அபாயம் உள்ளது என இப்போது தெரிவிக்கப்படுகிறது.
யாழ் மாவட்டத்தில் ஊசி சின்னத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்ட வைத்தியர் அருச்சுனா இராமநாதன் 20,487 விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.
இம்முறை சுமார் 20 வைத்தியர்கள் பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களாக பணிபுரிவதால் அவர்கள் அனைவரும் பாராளுமன்றத்திற்கு போட்டியிடுவதற்கு முன்னர் தொழிலை விட்டு வெளியேற வேண்டியிருந்தது.
மருத்துவராகப் பதிவு செய்துள்ள அர்ச்சுனா இராமநாதன், உத்தியோகபூர்வமாக தனது வேலையை இராஜினாமா செய்யாமலேயே நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சட்ட அமைப்பில் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதிவு செய்யப்பட்ட போதும் , அவர் மருத்துவத் தொழிலைக் கைவிடவில்லை என சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டிய நிலையில், அரசாங்கத்தில் உள்ள ஒருவர் அரசாங்கத்தில் மற்றொரு தொழில் மூலம் சம்பளம் பெற முடியாது என செய்திகளில் வெளியாகியுள்ளன .
இதன்படி, அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிப்பதற்கு சிக்கல் எழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சட்டச் சிக்கலால் அவர் மேலும் சிக்கல் நிலையை சந்திக்க நேரிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ராஜித சேனாரத்னவும் தனது வைத்தியர் தொழிலை கைவிட்டாது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகித்தமைக்காகவே அப்பதவியில் இருந்து நீக்கப்பட்ட வழக்கு ஒன்று ஏற்கனவே பதிவாகியுள்ளது.
வைத்தியர் ராஜித சேனாரத்ன தொடர்பான விவகாரம் இலங்கை அரசியல் மற்றும் சட்ட செயல்பாடுகளில் முக்கியமானதாகும். 1994-இல் அவர் பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டபின் தனது மருத்துவர் தொழிலை தொடர்ந்திருந்தார். இந்த செயல் இலங்கையின் சட்டங்களின் கீழ் ஒரு அரச அதிகாரி அல்லது தேர்தல் பதவி வகிப்பவர் எந்த ஒரு வேறு தொழிலையும் ஒரே நேரத்தில் செய்யக்கூடாது என்ற விதிமுறைக்கு எதிராக இருந்தது.
அதனைத் தொடர்ந்து, இந்த விவகாரம் நீதிமன்றத்தில் எடுத்துச்செல்லப்பட்டபோது, அவர் வைத்தியர் தொழிலை நிறுத்திவிட்டு, தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை மட்டும் தொடர்ந்து மேற்கொண்டார். இதனால், அவரை அந்த பதவியில் இருந்து நீக்க முடியவில்லை, மேலும் அந்த வழக்கு ஒரு முக்கிய அரசியல் மற்றும் சட்ட விவாதமாக விளங்கியது.