கொழும்பு மாவட்டம் ஆபத்தில் ! அதிகரிக்கும் கொரோனா பரவல் …

நேற்றையதினத்தில் மட்டும் கொழும்பு மாவட்டத்தில் கொரோனா நோயாளர்கள் 160 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் ஊடக பேச்சாளர் வைத்தியர் ஐயருவன் பண்டார தெரிவித்துள்ளார். இந்த நிலைமை காரணமாக கொழும்பு மாவட்டத்தில் கொரோனா ஆபத்து அதிகரித்துள்ளது என்று வைத்தியர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பு மாவட்டத்தில் மக்கள் தொகை  அதிகரிப்பதன் காரணமாக வைரஸ் பரவுவது நாட்டின் பிற பகுதிகளை விட வேகமாக உள்ளது என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.  இதன் காரணமாக கொழும்பு நகரில் வசிக்கும் மக்களும், வேலைவாய்ப்புக்காக மற்ற பகுதிகளிலிருந்து கொழும்பு நகரத்திற்கு வருபவர்களும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும், முடிந்தவரை நெரிசலான இடங்களிலிருந்து விலகி இருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இன்று காலை பொரளை லெஸ்லி ரணகல மாவத்தையில் ஒரு சாலையை தற்காலிகமாக மூட காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளதாக இன்று காலை தெரிவிக்கப்பட்டது. குறித்த வீதி பகுதிகளில் வசிக்கும் 04 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. அதனை தொடர்ந்து அவர்களுடன் பழகியவர்களுக்கு PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் அவர்களுக்கு கொரோனா இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.