சீரற்ற காலநிலையால் யாழ். மாவட்டத்தில் 7 ஆயிரம் பாதிப்பு.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக காரணமாக 1901 குடும்பங்களைச் சேர்ந்த 7 ஆயிரத்து 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும், 27 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன எனவும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்தார்.
சங்கானை பிரதேச செயலகப் பிரிவில் 573 குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 335 பேரும், யாழ்ப்பாணம் பிரதேச செயலகப் பிரிவில் 470 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 520 பேரும், சண்டிலிப்பாய் பிரதேச செயலகப் பிரிவில் 265 குடும்பங்களைச் சேர்ந்த 928 பேரும், ஊர்காவற்றுறை பிரதேச செயலகப் பிரிவில் 215 குடும்பங்களைச் சேர்ந்த 901 பேரும், சாவகச்சேரி பிரதேச செயலகப் பிரிவில் 171 குடும்பங்களைச் சேர்ந்த 599 பேரும், காரைநகர் பிரதேச செயலகப் பிரிவில் ௧௪௧ குடும்பங்களைச் சேர்ந்த 508 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை, தெல்லிப்பழை பிரதேச செயலகப் பிரிவில் 21 குடும்பங்களைச் சேர்ந்த 64 பேரும், கோப்பாய் பிரதேச செயலகப் பிரிவில் 19 குடும்பங்களைச் சேர்ந்த 73 பேரும், நல்லூர் பிரதேச செயலகப் பிரிவில் 16 குடும்பங்களைச் சேர்ந்த 47 பேரும், பருத்தித்துறை பிரதேச செயலகப் பிரிவில் 10 குடும்பங்களைச் சேர்ந்த 35 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் பணிப்பாளர் அறிக்கையிட்டுள்ளார்.