‘நான் செய்தது ரணிலுக்குத் தெரியும். ரணில் வாயை மூடிக்கொண்டதற்கான காரணத்தை வெளிப்படுத்தினார் ரவி.
முன்னர் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம் இம்முறை புதிய ஜனநாயக முன்னணிக்கு வழங்கப்பட்ட தேசியப்பட்டியல் உறுப்பினராகவே தான் நாடாளுமன்றத்திற்கு வந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
அது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தெரியும் என கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.
அந்த உடன்படிக்கை தொடர்பில் தமக்கு தெரியும் என்பதாலேயே இதுபற்றிப் ரணில் விக்கிரமசிங்க பேசவில்லை எனத் தெரிவித்துள்ள ரவி கருணாநாயக்க ,அவர் நாடாளுமன்றத்தில் தொடர்ந்தும் இருப்பார் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தான் நாடாளுமன்ற உறுப்பினராவதை ஒரு சிலருக்கு பிடிக்கவில்லை என்றாலும் 99% பேர் விரும்புவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தலதா அத்துகோரளவிற்கு இந்த பதவி வழங்குவதாக சிலர் பேசினாலும் அவர் கட்சி மாறியவர் என அவர் தெரிவித்துள்ளார்.