பேருந்து விபத்து.. பேருந்து இரண்டாக உடைந்தது.. மருத்துவமனையில் பயணிகள்.
அதிவேகமாக பயணித்த தனியார் பஸ் ஒன்று எதிர்திசையில் பயணித்த இபோச பஸ்ஸுடன் மோதியதில் தனியார் பஸ்ஸின் பின் பகுதி உடைந்துள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.
ஹட்டன் கொழும்பு பிரதான வீதி வத்தளை கரோலினா தோட்ட பகுதியில் இன்று காலை 6.40 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
ஹட்டன் இபோச டிப்போவில் கினிகத்தேனையிலிருந்து ஹட்டன் நோக்கிச் சென்ற பஸ்ஸும், ஹட்டனில் இருந்து கண்டி நோக்கிச் சென்ற தனியார் பஸ்ஸும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
ஹட்டனிலிருந்து கண்டி நோக்கி அதிவேகமாகச் சென்ற தனியார் பேருந்து எதிர்திசையில் முன்னோக்கிச் சென்ற இபோச பேருந்து பிரேக் போட்டதில், தனியார் பேருந்தின் பின்பகுதி நழுவி விபத்துக்குள்ளானது. இபோச பஸ்ஸுடன் மோதியதில் தனியார் பஸ் இரண்டாக உடைந்துள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் படுகாயமடைந்த நால்வரின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை.
நிலவும் மோசமான வானிலையுடன் ஹட்டன் கொழும்பு பிரதான வீதி மற்றும் பக்க வீதிகள் வழுக்கும் தன்மையுடன் காணப்படுகின்றன.
இந்த விபத்தில் தனியார் பஸ்ஸுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பான விசாரணைகளை வட்டவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.