பாகிஸ்தான் பூசல் – 7 நாள் சண்டை நிறுத்தம்
பாகிஸ்தானில் இரண்டு தரப்புக்கு இடையே தொடரும் வன்முறையை ஒட்டி ஏழு நாள் சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
வட மேற்கு வட்டாரத்தில் ஷியா முஸ்லிம்களுக்கும் சன்னி முஸ்லிம்களுக்கும் இடையே மோதல்.
இருதரப்பும் வன்முறையை நிறுத்த இணக்கம் கண்டிருப்பதாக அதிகாரிகள் கூறினர்.
கைதிகளைப் பரிமாற்றிக்கொள்ளவும் மாண்டோரின் உடல்களைத் திரும்பக் கொடுக்கவும் குழுக்கள் சம்மதித்ததாக தெரிவிக்கப்பட்டது.
பாகிஸ்தானின் வடமேற்கு குராம் வட்டாரத்தில் 3 நாள்களாக இரு குழுக்களும் வன்முறையில் ஈடுபட்டன.
82 பேர் மாண்டனர்.
150க்கும் அதிகமானோர் காயமுற்றனர்.
ஆயிரக்கணக்கானோர் வீடுகளைவிட்டு வெளியேற நேரிட்டது.
வீடுகளுக்கும் கடைகளுக்கும் தீவைக்கப்பட்டது.
அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி இருதரப்பையும் சண்டை நிறுத்தத்திற்கு இணங்க வைத்தனர்.
இருப்பினும் பதற்றநிலை அதிகமாகவே உள்ளது.
அந்த வட்டாரத்தில் கைத்தொலைப்பேசிக் கட்டமைப்பு தொடர்ந்து ரத்து செய்யப்பட்டிருக்கிறது.