ஆசன சம்பவம் : பல்வேறு அச்சுறுத்தல்களால் வீதியில் இறங்க முடியாதுள்ளது – அர்ஜூனா ராமநாதன் பாதுகாப்பு கோருகிறார் (Video)
தனக்கு தனிப்பட்ட முறையில் பாதுகாப்பு தேவை என யாழ்.மாவட்ட புதிய நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜூனா இராமநாதன் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் 10வது பாராளுமன்றத்தின் ஆரம்ப அமர்வின் போது தாம் மேற்கொண்ட நடவடிக்கையினால் ஏற்பட்டுள்ள நிலைமை காரணமாக பல்வேறு அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன் காரணமாக தனக்கு தனிப்பட்ட பாதுகாப்பு தேவை என்று கூறியுள்ளார்.
10வது பாராளுமன்றத்தின் ஆரம்ப அமர்வின் போது, பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜூன ராமநாதன், எதிர்க்கட்சித் தலைவருக்கென ஒதுக்கப்பட்ட பாரம்பரிய ஆசனத்தில் அமர்ந்திருந்ததுடன், அது தொடர்பில் தெரிவிக்கப்பட்ட போதிலும், பாராளுமன்ற உறுப்பினர் அங்கிருந்து வெளியேற மறுத்திருந்தார்.
அவர் இனவாத கருத்துக்களை வெளியிட்டதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இச்சம்பவங்களினால் தமக்கு கடும் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளதாக புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான செயலமர்வில் நேற்று (25) உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜூன இராமநாதன் தெரிவித்துள்ளார்.
அத்தோடு தனது பாராளுமன்ற நடிவடிக்கைக்கு அர்ச்சுனா பகிரங்கமாக மன்னிப்பு கோரினார்.
ஆனாலும் , ஆசன சம்பவத்தினால் வீதியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், பல்வேறு ஊடகங்களுடன் 40 – 50 நிமிடங்கள் கலந்துரையாடியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன் காரணமாக தனக்கு பாதுகாப்பு தேவை என்றும் எப்போது கிடைக்கும் என்றும் அவர் கேட்ட போது , அதற்குப் பதிலளித்த நாடாளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன, தனிப்பட்ட பாதுகாப்பு தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சிடம் எழுத்துமூலக் கோரிக்கை விடுக்கப்பட வேண்டுமென தெரிவித்தார்.
எம்.பி அர்ச்சுனா பகிரங்கமாக மன்னிப்பு கோரினார்.. (Video)
https://www.ceylonmirror.net/159807.html