அர்ச்சுனாவுக்குப் பிடியாணை.

யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவுக்குப் பிடியாணை பிறப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதிவான் மஞ்சுளா ரத்நாயக்க உத்தரவிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஊடாக அர்ச்சுனாவுக்குப் பிடியாணை பிறப்பிக்குமாறு இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு – பேஸ்லைன் வீதியில் கடந்த 2021ஆம் ஆண்டு மார்ச் 22ஆம் திகதி காரைச் செலுத்திச் சென்ற அர்ச்சுனா இன்னுமொரு காரை மோதி விபத்தை ஏற்படுத்தியதுடன், அந்தக் காரின் சாரதியைத் தாக்கிக் கடுமையாகக் காயப்படுத்தினார் எனக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்தநிலையில், சந்தேகத்துக்குரிய இராமநாதன் அர்ச்சுனா தொடர்ந்தும் வழக்கு விசாரணைகளில் முன்னிலையாவதைத் தவிர்த்து வருவதனால் அவருக்குப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு எதிராகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் பல முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.