முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இலஞ்ச ஊழல் விசாரணை.
ரோயல் பார்க் படுகொலை சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு நேற்று (26) வாக்குமூலம் பதிவு செய்துள்ளது. இரண்டரை மணித்தியாலங்கள் அங்கு தங்கியிருந்த முன்னாள் ஜனாதிபதி முற்பகல் 11.15 மணியளவில் வந்து மதியம் 1.30 மணியளவில் வெளியேறியதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
ரோயல் பார்க் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய ஜனாதிபதியின் மன்னிப்பிற்காக முன்னாள் ஜனாதிபதி இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.