சரிகமப-வில் தனது ஊருக்காக அங்கீகாரம் தேடும் போட்டியாளர்.
தற்போது நடைபெற்று வரும் சரிகமப லிட்டில் சாம்பியன்ஸ் நிகழ்ச்சியில் பல சிறுவர்கள் தங்கள் பாடலை சிறப்பாக பாடி வருகின்றனர். இதற்கு ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
சரிகமப தற்போது சரிகமப லிட்டில் சாம்பியன்ஸ் இன் மெஹா ஆடிசன் நடைபெற்று வருகின்றது. இதில் பல குழந்தைகள் தங்கள் வசீகர குரலால் நடுவர்களை கவர்ந்து வருகின்றனர்.
தற்போது மெஹா ஓடிசன் முடிந்து முதல் சுற்றில் போட்டியாளர்கள் பாடி வருகின்றனர். இது இன்ரோ சுற்றாகும். இதில் குறை சொல்வதற்கு யாரும் இல்லை. அனைத்து குழந்தைகளும் சிறப்பாக பாடி அசத்துகின்றனர்.
அதில் என்ன தான் சிலர் தங்கள் திறமையை காட்டுவதற்கு தனக்கான மேடையை தேர்ந்து எடுத்தாலும் சில குழந்தைகள் தங்களை சுற்றி உள்ளவற்றின் நன்மைக்கும் போராடுவார்கள்.
அப்படியான ஒரு சிறுமிதான் தர்ஷினி. இவர் அம்மணம்பாக்கம் திண்டிவனப்பகுதியில் இருந்து வருகிறார். இந்த சிறுமி தனது கிராமத்தில் இருந்து பாடசாலைக்கு சென்று படிப்பதற்கு 5 கி.மீ துரத்தில் நடந்து செல்ல வேண்டும்.
இந்த கிராமத்தில் இருந்து 30 பேர் இப்படி படிக்கின்றனர். இங்கு போக்குவரத்து வசதி இல்லாததால் அனைத்து சிறுவர்களும் பாடசாலைக்கு செல்ல சிரமப்படுகின்றர்.
இந்த சிறுமி இந்த போட்டியில் கலந்துகொண்டதற்கான காரணம் தனக்கு ஒரு அங்கீகாரம் கிடைப்பதன் மூலமாவது இந்த கிராமத்திற்கு இந்த போக்குவரத்து வசதியை செய்து கொடுப்பார்கள் என்று தான் என கூறுகின்றார்.
இந்த சிறிய வயதில இப்படியொரு தாராள மனப்பான்மை இருப்பது பாராட்டதக்க விடயம். இதன் காரணமாக அனைத்து நடுவர்களும் இந்த சிறுமியை பாராட்டுகின்றனர்.