பாதிக்கப்பட்ட மக்களைப் பார்வையிட்டார் பிரதி பாதுகாப்பு அமைச்சர்.(video)
மன்னார் மாவட்டத்தில் சீரற்ற கால நிலையால் பாதிக்கப்பட்டு நலன்புரிநிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களைப் பிரதி பாதுகாப்பு அமைச்சர்அருண ஜெயசேகர இன்றைய தினம் (27.11)நேரில் சென்று பார்வையிட்டார்.
மன்னார் மாவட்டச் செயலகத்தில் அணைத்து திணைக்கள அதிகாரிகளுடனும் இடம்பெற்ற அவசர கலந்துரையாடலின் பின்னர், அமைச்சர், மன்னாரில் உள்ள நலன்புரி நிலங்களுக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து உரையாடினார்.
இதன் போது பிரதேச செயலாளர் ம.பிரதீப், அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் க. திலீபன், தேசிய மக்கள் சக்தியின் மன்னார் மாவட்ட இணைப்பாளர், மற்றும்,நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் தொடர் மழை காரணமாகபாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் இன்று புதன்(27.11) காலை வரை 15 ஆயிரத்து 205 குடும்பங்களைச் சேர்ந்த 52 ஆயிரத்து487 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,
அவர்களில் 1240 குடும்பங்களைச் சேர்ந்த 4 ஆயிரத்து 128 நபர்கள் மன்னார், மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 43 தற்காலிக நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.