3 இலட்சத்தை நெருங்கும் பாதிப்படைந்தோர் தொகை – யாழில் மட்டும் 43 ஆயிரம் பேர்.
இலங்கையில் தொடரும் பலத்த மழையால் ஏற்பட்ட அனர்த்தங்களால் இதுவரை 59 ஆயிரத்து 629 குடும்பங்களைச் சேர்ந்த 2 இலட்சத்து 75 ஆயிரத்து 582 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கத்தால் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில் யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் அடை மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் ஏனைய அனர்த்தங்களால் 12 ஆயிரத்து 970 குடும்பங்களைச் சேர்ந்த 43 ஆயிரத்து 682 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்தார்.
இதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தில் அடை மழையால் இரணைமடுக் குளத்தின் 14 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
வவுனியா மாவட்டத்தில் ஓமந்தை – நொச்சிமோட்டை பாலம் மற்றும் அதனை அண்டிய பகுதிகள் வௌ்ளத்தால் முற்றாக மூழ்கியுள்ளன.