சீரற்ற காலநிலை குறித்து வவுனியாவில் விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்.

வவுனியாவில் கடந்த சில நாட்களாக ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை தொடர்பாக ஆராய்வதற்கான விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று வியாழக்கிழமை காலை கூட்டுறவு பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில் நடைபெற்றது.

இதன்போது மாவட்டத்தின் நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் ஏற்ப்பட்டுள்ள சீரற்ற காலநிலை பாதிப்புகள் தொடர்பாகவும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்பட வேண்டிய மேலதிக நடவடிக்கைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரிஷாத் பதியுதீன், காதர் மஸ்தான், ம.ஜெகதீஸ்வரன், து.ரவிகரன், செ.திலகநாதன், ப.சத்தியலிங்கம் மற்றும் அரச அதிபர் பி.ஏ.சரத்சந்திர, பிரதேச செயலாளர்கள், அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், பொலிஸார், இராணுவத்தினர் உட்படப் பலர் கலந்துகொண்டிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.