ஃபெங்கல் புயல் ,இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையில் கனமழையை ஏற்படுத்திய தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக உருவாகி தமிழகத்தின் புதுச்சேரி கடற்கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நேற்றைய நிலவரப்படி, தமிழகத்தின் பல மாகாணங்களில் கனமழை பெய்துள்ளது, மேலும் தற்போதைய சூழ்நிலையால் விமானங்கள் தடைபடலாம் என்று துாத்துக்குடி, மதுரை மற்றும் திருச்சிராப்பள்ளி செல்லும் அனைத்து பயணிகளுக்கும் இண்டிகோ ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன. ஃபெங்கால் புயல் என பெயரிடப்பட்டுள்ள இந்த நிலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வட தமிழக கடற்கரையை கடந்து மணிக்கு 50-60 கி.மீ வேகத்தில் நகரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இந்திய கடலோர காவல்படையினர் தமிழகத்தின் மாநில பிரதிநிதிகளுடன் இணைந்து மோசமான வானிலைக்கு மத்தியில் மீனவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஆழ்கடல் காற்றழுத்த தாழ்வு பகுதியால் அனைத்து மீன்பிடி படகுகளும் விமானம், கப்பல்கள் மற்றும் ரேடார் மூலம் விரைவில் கரை திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. புயலாக உருவாகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது