மலேசியாவின் பெருஞ்செல்வந்தர் ஆனந்த கிருஷ்ணன் காலமானார்.
மலேசியாவைச் சேர்ந்த பெருஞ்செல்வந்தர் ஆனந்த கிருஷ்ணன் நவம்பர் 28ஆம் தேதியன்று காலமானார்.
அவருக்கு 86 வயது.
அவரது மொத்த சொத்து மதிப்பு 5.8 பில்லியன் அமெரிக்க டாலர் என்று மதிப்பிடப்படுகிறது.
ஃபோர்ப்சின் பெருஞ்செல்வந்தர்கள் பட்டியலில் அவர் அடிக்கடி இடம்பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
மலேசியாவின் மூன்றாவது ஆகப் பெரிய பணக்காரர் எனும் பெருமை திரு ஆனந்த கிருஷ்ணனைச் சேரும்.
மலேசியாவின் இரண்டாவது ஆகப் பெரிய கைப்பேசி சேவை நிறுவனமான மேக்சிசை அவர் நிறுவினார்.
ஆனந்த கிருஷ்ணன், ஆஸ்ட்ரோ மலேசியா எனும் ஊடக நிறுவனத்தையும் நிறுவியவர்.
ஆனந்த கிருஷ்ணனுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
அவர்களில் ஒருவர் பௌத்த பிக்கு.