அமைச்சுகளுக்குச் சொந்தமான சொகுசு வாகனங்களை ஏலம் விடுவதற்கு அரசாங்கம் முடிவு.

தற்போது அரசாங்க அமைச்சுக்கள் வசம் உள்ள குறைந்த எரிபொருள் திறன் கொண்ட சுமார் 254 அதி சொகுசு வாகனங்களை ஏலம் விடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமைச்சரவை மற்றும் அரசாங்க மதிப்பீட்டாளரின் சான்றிதழைப் பெற்ற பின்னர் இந்த வாகனங்கள் ஏலத்தில் விடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

இந்த சொகுசு வாகனங்களை பராமரிக்க அரசு அதிக பணம் செலவழிப்பதே இந்த முடிவுக்கு காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏலத்தில் விடப்படவுள்ள பல வாகனங்கள் அமைச்சர்கள் முன்பு பயன்படுத்திய வாகனங்கள் ஆகும்.

Leave A Reply

Your email address will not be published.