இன்று முதல் அரிசி இறக்குமதிக்கான டெண்டர் கோரப்படுகிறது.

அரிசி இறக்குமதிக்கான விநியோகஸ்தர்களை தெரிவு செய்வதற்காக இன்று (29) முதல் டெண்டர் கோரப்படவுள்ளது.

இறக்குமதியாளர்கள் இன்று முதல் 7 நாட்களுக்குள் மொத்த அரிசியை இறக்குமதி செய்வதற்கு விண்ணப்பிக்க முடியும் என லக் சதொச தலைவர் டொக்டர் சமித்த பெரேரா தெரிவித்துள்ளார்.

அதன்படி 70,000 மெற்றிக் தொன் அரிசியை பல கட்டங்களின் கீழ் இலங்கைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த அரிசி பண்டிகை காலத்துக்கு முன்னதாக சந்தைக்கு விடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரிசி இருப்புக்களை லக் சதொச கடைகள் ஊடாகவும் பல்பொருள் அங்காடிகள் மற்றும் பொது மொத்த விற்பனை நிலையங்கள் ஊடாகவும் விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக டொக்டர் சமித்த பெரேரா தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.