வரலாற்றில் முதல் முறையாக எமது அரசாங்கமே இவ்வளவு வேகமான நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது- கூட்டுறவு அபிவிருத்தி பிரதியமைச்சர் உபாலி சமரசிங்க.(video)

மன்னாரில்  சீரற்ற  காலநிலையால் பாதிக்கப்  பட்ட  மக்களுக்கான நிதித்  தேவையை, வரலாற்றில்  முதன் முறையாகத் துரித கதியில் எமது அரசாங்கமே  பூர்த்தி செய்துள்ளதெனக்.  கூட்டுறவுப் பிரதியமைச்சரும்,  வன்னி  மாவட்ட அபிவிருத்திக்குழுத்  தலைவருமான உபாலி  சமரசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்றைய  தினம்  மன்னார் மாவட்டச் செயலகத்தில்  இடம்பெற்ற அபிவிருத்திக்குழு  கூட்டத்தில் கலந்து  கொண்டு  அரசாங்க அதிபர் மற்றும் அனைத்து திணைக்கள அதிகாரிகளுடனும் கலந்துரையாடிய

பின்னர் ஊடகங்களுக்கு  வெளியிட்ட அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர்,

“நாங்கள்  மாவட்ட அரசாங்க  அதிபர் மற்றும்  மாவட்ட  பிரதேச  செயலாளர்ஆகியோரோடு கலந்துரையாடல் ஒன்றில்  ஈடுபட்டோம். அங்கு கலந்து கொண்டபல அமைப்புகளும் அரசாங்க  அதிபரும்  தெரிவித்த கருத்துகளின்  படி, சீரற்ற காலநிலையால்,  இலங்கையில் மிகவும்  மோசமாக  மன்னார் பகுதி பாதிக்கப்பட்டுள்ளதாகத்  தெரிகிறது.

அதன் பிரகாரம்  பாதிக்கப்பட்ட மக்களுக்கு, உணவு,சுகாதார வசதிகள்  மற்றும்  அத்தியாவசியத் தேவைகளுக்குத் தேவையான பணம் அரசாங்கத்திலிருந்து கிடைத்துள்ளதாகவும், ஆனாலும்  தினந்தோறும் அனர்த்தங்கள்  அதிகமாகி வருவதனால், ஒதுக்கப்பட்டுள்ள பணம்  போதாமல்  உள்ளதாகவும், அங்குள்ள  மக்களது அத்தியாவசியத்   தேவைகளான, உணவு, தண்ணீர் மற்றும் வடிகால்களைத் திருத்துவதற்கான  இயந்திரங்களுக்கு செலவிட அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ள பணம்  போதாமை  காரணமாகவும் மேற்கொண்டு   பணிகளைச்  செய்ய முடியாமல் இருக்கிறது னவும். அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

இது  தொடர்பாக, நானும் எனது கட்சியைச்  சேர்ந்தவர்களும்  கலந்துரையாடினோம், அதன் பின் இது குறித்து போக்குவரத்து , நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள்  அமைச்சர் பிமல்  ரத்னாயக்கவிடம் தொலைபேசி வழியாக அறிவித்தோம். அவர் ஜனாதிபதி செயலகம்,   மற்றும் நிதி அமைச்சர் ஆகியோருடன் பேசி இன்று காலை 10 மணிக்கு முன்னர் தேவைப்படும் பணத்தை, மன்னார் அரச அதிபரது அனர்த்தம் தொடர்பான வங்கிக் கணக்குக்கு அனுப்புவதாக உறுதியளித்துள்ளார்.

எனவே மன்னார் மக்களுக்கும், அரஅதிகாரிகளுக்கும்   சொல்ல விரும்புவது, வரலாற்றில் முதல் முறையாக உடனடியாக எமது அரசினால் இவ்வளவு வேகமாக  நிதித் தேவை நிறைவேற்றப்டுகிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அத்துடன், இவ்வளவு பெரிய தொகைப் பணம் அமைச்சர் பிமல் ரத்னாயக்கவின் செயற்பாட்டினால் உடனடியாக கிடைக்கப் பெறுகிறது என்பதையும் தெரிவித்துக் கொள்வதுடன்.

ஜனாதிபதியின் தலைமையில் மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் உடனடியாகச்  செய்வதற்கு   எங்கள் அரசு  முன்வந்துள்ளது. மக்களை   மீள்குடியேற்றுவதற்கான பணிகளை எமது அரசாங்கம் .   உடனடியாக  முன்னெடுத்து வருகிறது. மக்கள் வெகு வேகமாக மீண்டும் தமது வீடுகளில் போய்த் தங்குவதற்காகவே  நாம் செயற்படுகிறோம் என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம் .  என்று தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.