இலங்கை – இந்தியக் கடற்படையின் கூட்டு நடவடிக்கையால் 500 கிலோ போதைப்பொருள்களுடன் 9 இலங்கையர் கைது!
இலங்கை – இந்தியக் கடற்படையின் கூட்டு நடவடிக்கையால் நடுக் கடலில் வைத்து 500 கிலோகிராம் போதைப்பொருள்களுடன் 9 இலங்கையர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சர்வதேச கடல் வழியாக இரண்டு படகுகளில் அதிகளவான போதைப்பொருள்கள் கடத்துவதான தகவலையடுத்து இரு நாட்டு கடற்படையினரும் கூட்டிணைந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதன்போது இரு படகுகளில் 500 கிலோகிராம் மெத்தமன் ரக போதைப்பொருள்கள் கடத்தி வரப்பட்டபோது போதைப்பொருள்களுடன் 9 பேரும் நடுக் கடலில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட 9 பேரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்ற வகையிலும், கூட்டிணைந்த நடவடிக்கை என்பதனாலும் சந்தேகநபர்கள் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்களுடன் இலங்கைக் கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.