தந்தையும் மகனும் 30 கோடி ஆட்டையை போட்டு விட்டு, நாட்டை விட்டு ஓட்டம்…. நெருக்கடியை சந்திக்கும் தனியார் வங்கி..

அண்மைய நாட்களாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய பல பில்லியன் ரூபா சுங்க வரி மோசடியில் ஈடுபட்ட நிறுவனமொன்றின் தலைவர்கள் இருவரினால் மேற்கொள்ளப்பட்ட நிதி மோசடி காரணமாக இலங்கையிலுள்ள தனியார் வங்கியொன்று ஆபத்தில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நிறுவனத்தின் உரிமையாளரான தந்தை மற்றும் மகன் இருவரும் இணைந்து மூன்று பில்லியன் ரூபா மோசடி செய்ததன் காரணமாக, இந்த தனியார் வங்கி பாரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.

குறித்த மகன், தவறான நிதிப் பதிவேடுகளைக் காட்டி, வங்கிக் கடனொன்றின் ஊடாக 2.4 பில்லியன் ரூபாவிற்கு இங்கிலாந்தில் திவாலான நிறுவனமொன்றை வாங்கியதுடன், அந்த நிறுவனத்திடம் கடனைத் தவிர வேறு சொத்துக்கள் எதுவும் இல்லை என பின்னர் தெரியவந்துள்ளது.

தந்தையும் மகனும் நிறுவன ஊழியர்களை ஏமாற்றியுள்ளதாகவும், இருவரும் வெளிநாட்டு பிரஜைகள் என்பதால், அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் இந்நாட்டு அரசுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிறுவனத்தின் மொத்த மாதாந்த வருமானத்தை விட கடன் வட்டி அதிகரித்துள்ளதாகவும், அடுத்த சில மாதங்களில் தொடர்புடைய மூன்று பில்லியன்கள் வாராக் கடனாக மாறுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக இருப்பதாகவும், இது நடந்தால், இந்த தனியார் வங்கி ஒரு பெரிய நிதி நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும் என்றும் நிதிச் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி மற்றும் தலைமை செயல் அதிகாரி ஆகியோர் தங்களது ராஜினாமா கடிதங்களை சமர்ப்பித்துள்ளதாகவும் தெரியவருகிறது.

Leave A Reply

Your email address will not be published.