பயிர் சேதத்திற்கு அரசிடம் இருந்து இழப்பீடு

விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.

அதாவது மோசமான வானிலையால் நாசமான பயிர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும்.

நெல், சோளம், உருளைக்கிழங்கு, சோயாபீன், மிளகாய் மற்றும் வெங்காயத் தோட்டங்களுக்கு இழப்பீடு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, ஒரு ஏக்கருக்கு அதிகபட்சமாக 40,000 ரூபாய்க்கு உட்பட்டு இழப்பீடு வழங்கப்படும் என பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

நாட்டில் நிலவும் மோசமான காலநிலை குறைந்ததன் பின்னர் பயிர் சேதம் தொடர்பான விபரங்களை சேகரித்து நட்டஈடு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அழிவடைந்த செடிகளை பயிரிட விவசாயிகளுக்கு நெல் வழங்கும் முறை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், மேற்குறிப்பிட்ட பயிர்களைத் தவிர மலையக மற்றும் தாழ்நில மரக்கறி விவசாயிகள் மற்றும் பழவகை விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கும் ஓரளவு நிவாரணம் வழங்கப்பட உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.