கெலும் ஜயசுமணவுக்கு எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியல்
கணினி குற்றப் பிரிவினரால் நேற்று (01) பிற்பகல் கைது செய்யப்பட்ட பிரபல அரசியல் செயற்பாட்டாளரான கெலும் ஜயசுமண , கொழும்பு அளுத்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரை எதிர்வரும் 04 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் தின நிகழ்வுகள் தொடர்பில் பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தும் பழைய காணொளிகளை இணையத்தில் பரப்பியதாக சந்தேகத்தின் பேரில் நேற்று (01) அதிகாலை 1.45 மணியளவில் அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த பொதுத் தேர்தலில் புதிய ஜனநாயகக் கட்சியின் (சிலிண்டர்) கீழ் குருநாகல் மாவட்டத்தில் கெலும் ஜயசுமண போட்டியிட்டார்.
பொய்ப் பிரச்சாரம் செய்த குற்றச்சாட்டின் கீழ் மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மருதானை, சுன்னாகம் மற்றும் பத்தேகம பிரதேசங்களைச் சேர்ந்த 28, 35 மற்றும் 45 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.